காலம் சென்ற தமிழார்வலர் திரு உமர் அவர்களின் "ஒருங்குறி எழுதி" வலைப் பக்கத்தை அவர்தம் இடையறாத கணித்தமிழ் தொண்டிற்காக, புதுச்சேரி இதழில், வலையூரும் தமிழ் மக்களுக்காக "உமர் ஒருங்குறி எழுதி" என்ற பெயரில் வலையேற்றியிருக்கிறேன். புதுச்சேரி-மின்னிதழ் புதுவை யூனிகோடு என்ற ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தினாலும், ஒருங்குறி எழுத்துரு உருவாக்கலில், என்னைப் போன்றவர்கெல்லாம் முன்னோடியாக விளங்கியதால், அவர் தமிழுலகிற்களித்த தேனீ தானியங்கு எழுத்துரு வடிவிலேயே இவ்விணைய பக்கத்தை வலையேற்றி இருக்கிறேன். இவ்வெழுதியினை இணையத் தொடர்பறுந்த நிலையிலும் பயன்படுத்தலாம். அவருடைய அமைப்பையும், அவர் இவ்விணைய பக்கத்தின் கடைசியாக கொடுத்த மின்மடல் முகவரியைக் கூட எனக்கு மாற்ற மனமில்லாததால், கனத்த இதயத்துடன் அதை அப்படியே விட்டிருக்கிறேன். அவர் இப்போதிருக்கும் இடத்திற்கும் ஒரு மின்மடல் இருந்தால் அங்கிருந்து கூட அவர் கணித்தமிழுக்காக வேண்டியவற்றை மடலாடலில் அள்ளி வழங்குவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை

இவண் அன்பன்
இராஜ. தியாகராஜன்.

உமர் ஒருங்குறி எழுதி
(AWC Phonetic Tamil Unicode Writer)

Type in English
ஆங்கிலத்தில் தட்டச்சவும்

Tamil Unicode
தமிழ் ஒருங்குறி


           

உங்கள் கருத்து: Umar