அத்தை பெற்ற தத்தை!


தத்தை யொத்த மொழி
     கட்டி வைத்த குழல்
     விற்கி ணைபுருவ முற்றவள்!

முத்தை யொத்த நகை
     பொட்டு வைத்த நுதல்
     முட்டி நிற்குநகி லுற்றவள்

அத்தை பெற்ற மகள்
     பற்று வைத்த வளை
     அட்டி யற்றடைத லெட்டுமோ?



சந்தப்பாமணி புலவர் அரங்க. நடராசன்
புதுச்சேரி