தனிப் பாடல்

கண் சிவக்கவில்லையோ?


இந்த நாட்டினி லுள்ள கடவுள ரென்ன தமிழறி வில்லரா?
வந்த ஆரியன் வஞ்ச மாய்வட மொழியி லேவதை புரிகிறான்;
சொந்த மண்ணினி லிந்த இழிவுதொ டர்ந்து நடைபெற விடுவதால்
புந்தி யில்லவ ரென்ற பழியுரை போந்து நம்மைந கைக்குமே!

பண்சு மந்துள பாட லாயிரம் பாரி ரோதமிழ் நூலினில்
விண்சி றந்தது களிதெ லுங்கிசை என்று பாடிவி யப்பதோ?
மண்சு மந்துள மதியி னாரதை மாந்தி யேதலை யாட்டினால்,
கண்சி வந்திட வில்லை யோவது காணு கின்றந மக்கெலாம்?



புலவர் அரங்க. நடராசன்
புதுச்சேரி