இயற்கை உணவு உண்பாய்;
இன்னல் தரும் நோய் தவிர்ப்பாய்...
தியானம் தினம் செய்திடுவாய்;
திக்கெட்டு மமைதி காப்பாய்...
சினம் தனைத் தவிர்ப்பாய்;
சிறப்புற வாழ்ந்திடுவாய்...
அன்புமழை பொழிவாய் மன
அழுத்தந் தனைக் குறைப்பாய்...
சுகாதார வாழ்வு பெறுவாய்;
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பாய்...
மழை நீரைச் சேமிப்பாய்;
மண்ணில் நீர்ப்பஞ்சங் குறைத்திடுவாய்...
உழைத்திட எந்நாளு(ம்) அசராய்
உயர்வுவுனைத் தேடிவரும் பாராய்...
நூலகஞ் செல்லப் பழகிடுவாய்;
நுண்ண றிவினைப் பெற்றிடுவாய்...
நல்ல நட்பினை நாடிடுவாய்;
நாளும் நன்மையை ஈட்டிடுவாய்...
மண்ணில்பிற வுயிர்களைப் போற்றிடுவாய்;
மனித நேயம் காத்திடுவாய்...
ஏன்? எதற்கு? என்றே கேட்டிடுவாய்;
எப்போதுங் கண்மூடித்தனம் களைந்திடுவாய்...
உழவுத் தொழிலை ஊக்குவிப்பாய்;
உலகின் பசிப்பிணியைப் போக்கிடுவாய்...
அச்செடுக்க
கவிஞர் பைரவி (வெ. இரமேசு),
புதுச்சேரி