பாவேந்தர் பாரதிதாசன் நினைவுப் பாவரங்கம்

ஏப்ரல் திங்களில் பாவேந்தரின் நினைவாக பதினாறு வரிகளுக்கு மிகாத மரபுப்பாக்களை வரவேற்கிறோம்.

     
   
 
 
பாவேந்தர் பாரதிதாசன் நினைவுப் பாவரங்கம்


புதுச்சேரி - மின்னிதழ் இத்திங்களில், இளையோரின் வருங்கால வாழ்வுநலங் கருதி, பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாளான ஏப்ரல் இருபத்தொன்று மற்றும் பிறந்த நாளான ஏப்ரல் இருபத்தொன்பது இவற்றையொட்டி, பாவேந்தரின் "புகைச்சுருட்டு", என்ற பாடலின் கீழ்வரும் வரிகள் வலியுறுத்தும், புகைச்சுருட்டை வெறுத்தொதுக்கும் கருத்தினை போற்றி, பதினாறு வரிகளுக்கு மிகாத வெண்சுருட்டின் கேட்டை வலியுறுத்தும் மரபுப்பாக்களை வரவேற்கிறது.

"காசு பணத்தால் தீச்செயலை வாங்கிப் - பின்
கைவிட எண்ணினும் முடியாம லேங்கி;
ஏசிக்கொண்டே விரலிடையில் தாங்கி - நீ
எரிமலை யாகா திருதுன்பம் நீங்கி!"

அனுப்பித்தர வேண்டிய கடைசி நாள்:
20.4.2005 (அறிவன்)
அனுப்ப வேண்டிய மின்மடல் முகவரி:
tyagu@pudhucherry.com அல்லது tyagu@sancharnet.in
அனுப்ப வேண்டிய எழுத்துரு வகை:
(திஸ்கி)
tscii/(பாமினி)bamini/(தாம்)tam/(தாப்)tab/(யூனிகோட்)unicode/(முரசொலி)murasoli/(தினத்தந்தி)thinathanthi/(தினகரன்)dinakaran/(மயிலை)mylai/(விகடன் - பழையது)vikatan(old)/(தினமணி)dinamani/(தினபூமி)Thinaboomi இதில் ஏதாவதொன்று.

பொறுப்பாசிரியர்
புதுச்சேரி - மின்னிதழ்


@@@@