பாரதியின் கடிதங்கள்

o::::o

            (பாரதியின் கடிதங்கள் தற்சமயம் ஒருங்குறியில் அச்சடிப்பு செய்யப்படுகின்றன. விரைவில் வலையேறும் - பொறுப்பாசிரியர்)

         பாரதியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு அவர்தம் கவிதைப் படைப்புகள் மட்டுமே பெருமளவில் இணையத்தில் பல இடங்களில் கவிதைத் தொகுப்புகளாகவும், பல்வேறு தமிழறிஞர்களால் மேற்கோள் காட்டப்படும் வகையிலும், வலையூரும் தமிழார்வலர்களின் கண்களுக்கும், கருத்துகளுக்கும் விருந்தளிக்கின்றன. ஆனால் பாரதியெனும் தனி மனிதனைப் பற்றி, பாரதியின் ஆன்மிகத்தைப் பற்றி, பாரதியின் குமுகாயச் சிந்தனை பற்றி, பாரதியின் அறிவியலைப் பற்றி, பாரதியின் சாதியத்தைப் பற்றி, பாரதியின் விடுதலைப் பற்றி, பாரதியின் தமிழைப் பற்றி ஆய்விற்காக ஆராய்ச்சி மேற்கொள்ளும் இன்றைய இளையோர்கள் பாரதியின் கவிதைகளை மட்டும் கையாள்வதை விட, அவருடைய கவிதைகள், கடிதங்கள், உரைநடை கட்டுரைகள் உள்ளிட்ட அத்தனை படைப்புகளையும் ஒருங்கே அறிவதால் மட்டுமே, பாரதியின் சிந்தனைகளைப் பற்றிய, ஓரளவுக்கு முழுமையான ஆராய்ச்சிக் கட்டுரைகளை தர இயலுமென்பது என்னுடைய உறுதியான கருத்து.

         அதன் விளைவாகவே இந்த இழையில், இதுவரை கிடைத்த பாரதியின் இருபத்து மூன்று கடிதங்களை வலையேற்றி இருக்கிறேன். இவை வலையேற அச்சடிப்பு செய்த உழைப்பு மட்டுமே என்னுடையது. இவைகளுக்கு ஆதாரமாக எனக்குப் பயன்பட்டது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, பாரதி அறிஞரான ரா.அ.பத்மநாபன் அவர்களுடைய "பாரதியின் கடிதங்கள்" எனும் நூல். பதிப்பகத்தின் முகவரி:
669 கே.பி. சாலை, நாகர்கோயில் - 629001, இந்தியா. மின்மடல் முகவரி: kalachuvadu@sancharnet.in. தொலைபேசி: 091-4652-278525. இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர், தனிப்பட்ட/கல்வி பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுகிறோம்.

இவண்
இராஜ. தியாகராஜன்

o::::o