வரவேற்புப் பாடல்


வணக்கம்

வல்லார்நம் தேவநேயர் வான்புகழ் ஓங்கிட
எல்லார்கும் எம்வணக்கம் ஈங்கு!

வரவேற்பு

பாவாணர் நூற்றாண்டுத் தமிழ்வி ழாவின்,
  பாட்டரங்கத் தலைவரையும், அன்பால், பண்பால்
பாவாணர் தமிழ்த் தொண்டைப் பாட வுள்ள
  பாவலர்கள் அனைவரையும் வரவேற் றிங்கே

பாவேந்தர் பிறந்தமண்ணின் பெருமை சேர்த்துப்
  பைந்தமிழை வளர்த்துவரும் தமிழ்ச்சான் றோரே!
பாவலரே! பெரியோரே! வரவேற் றும்மைப்
   பணிவுடனே அழைக்கின்றோம் வருக வென்றே!



புலவர் செ. இராமலிங்கன்.