பண்    : புன்னாகவராளி

தாளம்  : முன்னை        

     
  தமிழன் நற்காலத் தொடக்கம்  
   
 

ஆடுபாம்பே! எழுந்தாடு பாம்பே - இனி
    அழியாது தமிழென்றே ஆடுபாம்பே!

உ1

ஆரியதி னாலடைந்த தாழ்வு நீங்கித் - தமிழ்
    அரியணை யுற்ற தென்றே ஆடு பாம்பே!
சீரியநற் செந்தமிழைப் பேசுபவரே - நல்ல
    சிறப்பை யடைவரென்றேஆடு பாம்பே  (ஆடு)

2

ஆங்கி லத்திலுள்ள பல அவியல்கள் - இன்று
    ஆகின்றன தமிழிலென் றாடு பாம்பே!
ஈங் குளவருமே இனிச்சிறு காலத்தில் - பல
    இறும்பூது கண்டிடுவர் ஆடு பாம்பே!

3

நச்சுப் பகைமை யெல்லாம் நைந்தொழிந்து - தமிழ்
    நாடொருமை நண்ணுமென்றே ஆடு பாம்பே!
அச்சத்தை அடியோடும் அகற்றி விட்டுத் - தமிழ்
    ஆசிரியர் வாழுவரென் றாடு பாம்பே!

தேவநேயப் பாவாணர்
"இசைத் தமிழ்க் கலம்பகம்"

 
   
     
     
  பாவாணரின் நூற்றாண்டு விழாப் பாடல்கள்
நன்றி - நற்றமிழ்ப் பதிப்பகம்
 
   
 
முகிழ்ந்த கவிப்பூக்களில் சில

நூற் தொகுப்புப் பாடல்
வரவேற்புப் பாடல் - புலவர் செ. இராமலிங்கன்.
நன்றிப் பாடல் - புலவர் மு. இறைவிழியன்
தலைமைப் பா - திருக்குறள் புலவர் நாகை சிவம்

புலவர் மு.இறைவிழியன், புதுச்சேரி
புலவர் செ.இராமலிங்கன், புதுச்சேரி
திருக்குறள் புலவர் நாவை சிவம், மணற்பாறை  பொறிஞர் மி. அமலன் திருச்சிராப்பள்ளி