இராஜ. தியாகராஜன் - மின்னஞ்சல்: editor@pudhucherry.com

டிமோஸ் - பொது இணைய முகவரிப் பக்கங்கள்
(DMoz Open Directory Project Pages)


எனதினிய தமிழ் வலைஞர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம். டிமோஸ் எனப்படும் (டைரக்டரி மோஸில்லா) பொது இணைய முகவரிப் பட்டியலில் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் என பல மொழிகளில் அறிவியல், கலை, பண்பாடு, வட்டாரம் முதலான துறைகளுக்கான சொற்களை இட்டு இணைய தள முகவரிகள் பட்டியலிட்டு தரப்படுகின்றன. இதில் சிறப்பென்ன என்றால், இம்முகவரிப் பட்டியலை உருவாக்கப் பாடுபடுபவர்கள், இணையத்தில் வலையுலாவும் வலைஞர்களே. நீங்கள் கூட பங்கெடுத்து, ஒரு தலைப்பின் கீழ் பொறுப்பாளராக பட்டியலை ஒழுங்கு படுத்தலாம். நான் கூட தமிழ் மின்னிதழ்கள் என்ற சிறு பட்டியலுக்கு பொறுப்பாளராய் இருக்கிறேன்.

தமிழில் ஏறக்குறைய ஒழுங்கு படுத்தப்பட்ட பதினான்கு துறைகளின் சுட்டிகளை கீழே தமிழார்வலக்காக தந்திருக்கிறேன். தமிழை நேசிக்கும் நல்லிதயங்கள், இன்னும் எங்கெங்கெல்லாம் தமிழ் இணைய இதழ்கள், தளங்கள், பக்கங்கள் இருக்கின்றனவோ அவற்றின் சுட்டிகளை டிமோஸ் இணைய முகவரிப்பட்டியலுக்கு அளித்து பட்டியலை மேம்படுத்த உதவுங்கள்.

அன்புடன்
இராஜ.தியாகராஜன்.

டிமோஸ் இணையமுகவரிப் பட்டியல்
பொது இணையமுகவரிப் பட்டியல்
  அறிவியல்
  இல்லம்
  கணினி
  கலைகள்
  சமூகம்
  செய்திகள்
  நலவழி
  பார்வை
  பொழுதுபோக்கு
  வணிகம்
  வாங்குதல்
  விளையாட்டு
  விளையாடல்
  வட்டாரம்

-:o:O:o:-