மலருக்குத் தென்றல் பகையானால்


நிலவுக்குத் தென்றல் பகையானால்
வானமும் வறண்டு செல்லும்...

மலருக்குத் தென்றல் பகையானால்
மலரி னிதழ்கள் மடிந்துவிடும்...

கடலுக்கு நீரே பகையானால்
கடலின் உயிர்க ளிறந்திடுமே...

மனிதர்க்குத் தென்றல் பகையானால்
மனித உயிரும் மறைந்திடுமே...

சூறாவளிக்கு நீரும் பகையானால்
சுழன்று சென் றழித்திடுமே...

சீதைக்கு இராவணன் பகையானதால்
இலங்கையுஞ் சிதைக் கிறையானது...

கருவறைப் பகையான தாலே
கடவுளுங் கல்லானது கல்லறையில்...

நட்பி னிலக்கணம் பகையானால்
நம்பின வாழ்வு மழிந்திடுமே...

கொஞ்சும் கிளிகள் பகையானால்
கொத்தி யழிக்கும் சகத்தினையே...

உதட்டில் சிரிப்பே பகையானால்
வெந்து வீழ்ந்திடு முதடுகளின்று...

பாண்டியன் பெண்ணுக்குப் பகையானதால்
மதுரையும் மண்ணானது நெருப்போடு...



கவிதாயினி முனைவர் பா. கீதா
புதுசேரி