புதுவை விடுதலை 50 - மக்கள் திருவிழா
31.10.2004 முதல் 02.11.2004 வரை
 
   
 
1954 நவம்பர் 1 புதுச்சேரி பிரெஞ்சியர் ஆதிக்கதிலிருந்து
விடுதலை பெற்ற பொன்னாள். இந்திய நாட்டு விடுதலைப்
போராட்டம் போன்று புதுவை விடுதலையும் மக்களெழுச்சி,
அடக்குமுறை, சிறை, தியாகமெனப் பல்வேறு பரிமாணங்கள்
கொண்ட நெடிய வரலாறாகும். அவ்வரலாற்றை நினைவுகூரும்
வகையில், விடுதலைப் பொன்விழா கொண்ட்டங்களும்,
விடுதலை நினைவைப் பகிர்ந்துகொள்ளும் அரங்கங்களும்,
பெற்ற விடுதலை பேணிக் காக்கும் வகையுறுத்த வண்ணக்
கையெழுத்தியக்கமும், வரலாற்றுப் படக் கண்காட்சியும்
சுற்றுச்சூழலைக் காத்திட ஆயிரம் மரக்கன்றுகள் நடுவிழாவும்,
மக்கள் மனமகிழ கலை/இலக்கியப்போட்டி நிகழ்ச்சிகளும்,
அனைத்து தர மக்கள் பங்கேற்கும் எழுச்சிப் பேரணியும்
வரலாற்றுச் சிறப்பினை போற்றுவகை தியாகிகள் நினைவுச்
சுடர் ஓட்டமும் அனைத்துவகை கலை நிகழ்ச்சிகளடங்கிய
புதுவை விடுதலை 50 - கலை இலக்கிய இரவு நிரலும்
ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள்:
1. முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
2. ஆசிரியர் சங்கம்
3. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.
4. பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம்.
5. புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம்
6. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்.
7. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.
8. இந்திய மாணவர் சங்கம்.
9. அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

01 சிறப்புக் கவியரங்கம்
நாள்: 2.11.04 - இடம்: மீட்பர் அன்னை இல்லம்
வரவேற்புரை: திரு இரா. நாகசுந்தரம் அவர்கள்
தலைமை: கவிமாமணி திரு கல்லாடனார் அவர்கள்
பங்கேற்றோர்:
63 கவிஞர்கள்
பாடிய பொருள்:
புதுவைக் கவிதைகள்; புதுவை நிலை.