பார்வையாளர் எண்:

தமிழிலக்கணம்

1.முதலில் அறிய வேண்டிய ஆரம்ப இலக்கணம்:

           கீழ் வரும் அடிப்படை இலக்கணம் பள்ளி மாணவ
மாணவிகளுக்கும், தமிழ் தெரிந்து தமிழிலக்கணம் அறிய
முற்படுபவருக்கும், ஆரம்ப இலக்கணம் கற்பவருக்குமான
பகுதி. யாப்பு பற்றி அதிகமறிய விரும்புவோர்க்கு வேறுபல
தளங்களிருக்கின்றன. அத்தளங்களின் சுட்டிகள் வேறிடத்தில்
தரப்பட்டிருக்கின்றன

 1. உயிரெழுத்து:-

            தமிழ் மொழிக்கு உயிரென விளங்கும் எழுத்துக்கள் பன்னிரெண்டு. அவை பின்வருமாறு: -


  • (அ) குறில்:-அ, இ, உ, எ, ஒ
   (உ-ம்) ன்பு, னிமை, ண்மை, ன்பு, ழுக்கம்
  • (ஆ)நெடில்:-ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
   (உ-ம்) டல், தல், ழ்த்தல், றல், யம், தல், ஒளடதம்

 2. ஆய்தஎழுத்து:-

            உயிரெழுத்துக்களுடன் சேர்ந்தே படிக்கப்படினும் இந்த எழுத்து தனியாக ஆய்த எழுத்தென்றே அழைக்கப்படுகிறது: -


  • ஆய்தம்:-
   (உ-ம்) ஃது, ஃது, ஃகு,

 3. மெய்யெழுத்து:-

            இவை புள்ளியெழுத்து (அ) ஒற்றெழுத்து எனப்படும் மெய்யொக்கும் 18 மெய்யெழுத்துக்கள். அவையாவன: -


  • வல்லினம்:-
   க், ச், ட், த், ப், ற்
   -(உ-ம்)சக்கரம், மச்சம், பட்டம், மத்தளம், கப்பல், சிற்பம்.
  • மெல்லினம்:-
   ங், ஞ், ண், ந், ம், ன்
   -(உ-ம்)சங்கு, மஞ்சள், தூண், பந்தம், அம்மா, அன்னம்
  • இடையினம்:-
   ய், ர், ல், வ், ழ், ள்
   -(உ-ம்)பாய், தேர், ஆல், அவ்வை, சிமிழ், தேள்

 4. உயிர்மெய் எழுத்து:-

            உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டுடன் சேர்ந்து உருவாகும் எழுத்துக்களே உயிர்மெய்யெழுத்துக்கள். (உ-ம்) க் + அ = க.

 5. மொத்தத் தமிழ் எழுத்துக்கள்:-

            உயிரெழுத்துக்கள் 12, ஆய்த எழுத்து 1, மெய்யெழுத்துக்கள் 18 மற்றும் உயிர்மெய்யெழுத்துக்கள் 216 (12 x 18) சேர்ந்து மொத்த தமிழெழுத்துக்கள் 247. இவற்றுடன், சில வடமொழி உச்சரிப்புகளை வரி வடிவில் சொல்ல ஏதுவாக, ஹ், ஷ், ஜ, ஸ்ரீ, முதலான எழுத்துக்களும் தற்காலத்தில் வழக்கிலுள்ளன.

 6. மாத்திரை:-

            கண்சிமிட்டும் வினாடி அல்லது கட்டைவிரலும் நெடுவிரலும் ஒருசேர சொடுக்கும் கால அளவே ஒரு மாத்திரையென்று அழைக்கப்படுகிறது. கீழுள்ள பட்டியல் எழுத்துக்களுக்கான மாத்திரையளவினை குறிக்கின்றன:-  • மெய்யெழுத்துக்கள்.  ) அரை மாத்திரை
   ஆய்த எழுத்து.     )

  • உயிர்க் குறில்கள்.   ) ஒரு மாத்திரை
   உயிர்மெய்குறில்கள்  )

  • உயிர் நெடில்கள்    ) இரு மாத்திரை
   உயிர்மெய் நெடில்கள்)


இல்லம்/ 1/ 2/ 3/ 4/ 5/ 6/ 7/ 8/ 9/ 10/ 11/ 12--=:o:0:0:o:=--