பார்வையாளர் எண்:

நன்றியுரை

தமிழ்மொழிக்கேது முடிவு?

          அனைவரும் தமிழை குற்றமறப் பேசி, எழுதிப் பழக வேண்டுமென்ற பேரவாவினால் இலக்கண விளக்கங்களை இரத்தின சுருக்கமாக இங்கே தந்தோம். தமிழென்னும் மாகடலின் கரையில் நிற்கின்ற கால்களை நனைக்கும் அலைக்கரமாய் இலக்கணத்தினை சொன்னோம். ஆழத்தில் மூழ்கித் தேடும் நாவலர்க்கும், பாவலர்க்குமே கிடைக்கும் நல்முத்து. மலையின்கண் சக்கரம் உருட்ட உதவுங் கைகளாய் நாங்கள் இருந்தாலும், மலைச்சரிவென்னும் தமிழ்நேசத்தால் விசையெழ உருண்டோடட்டும் உங்கள் தமிழிலக்கியப் பயணம்.

          பின்வரும் நூல்கள் ஆரம்ப யாப்பிலக்கணத்தை அறிய மாணவ மாணவியர்க்கு மிகவும் உதவியாக இருக்கும்.

 • வீரசோழியம் - புத்தமித்திரனார் - பதினோராம் நூற்றாண்டு.
 • சிதம்பரப் பாட்டியல் - பரஞ்சோதியார் - பதினாறாம் நூற்றாண்டு.
 • இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர் - பதினேழாம் நூற்றாண்டு.
 • இலக்கண சூடாமணி - கவிபாலபாரதி - பதினேழாம் நூற்றாண்டு.
 • தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர் - பதினெட்டம் நூற்றாண்டு
 • செந்தமிழ் விளக்கம் - வீரமாமுனிவர் - பதினெட்டாம் நூற்றாண்டு
 • சுவாமிநாதம் - சுவாமிகவிராயர் - பத்தொன்பதாம் நூற்றாண்டு.
 • முத்துவீரியம் - முத்துவீர உபாத்தியாயர் - பத்தொன்பதாம் நூற்றாண்டு.
 • வண்ணத்தியல்பு - தண்டபாணி சுவாமிகள் - பத்தொன்பதாம் நூற்றாண்டு.
 • கட்டளைக் கலித்துறை - சி.வை. தாமோதரம் பிள்ளை - பத்தொன்பதாம் நூற்றாண்டு.
 • விருத்தப் பாவியல் - தி. வீரபத்திர முதலியார் - பத்தொன்பதாம் நூற்றாண்டு.
 • அறுவகை இலக்கணம் - தண்டபாணி சுவாமிகள் - பத்தொன்பதாம் நூற்றாண்டு.
 • எழாம் இலக்கணம் - தண்டபாணி சுவாமிகள் - பத்தொன்பதாம் நூற்றாண்டு.
 • செய்யுளிலக்கணம் - பூவை கலியாணசுந்தர முதலியார் - பத்தொன்பதாம் நூற்றாண்டு.
 • யாப்பிலக்கண உரை - சைவ சித்தாந்த பதிப்பு - இருபதாம் நூற்றாண்டு.
 • யாப்பருங்கல விருத்தியுரை - பதிப்பு - பவானந்தபிள்ளை - இருபதாம் நூற்றாண்டு.
 • யாப்பொளி - ஆர். சீனிவாச ராகவாச்சாரியார் - இருபதாம் நூற்றாண்டு.
 • யாப்பதிகாரம் - புலவர் குழந்தை - இருபதாம் நூற்றாண்டு.
 • இலக்கண விளக்கம் - யாப்பியல் - கே. இராஜகோபாலாச்சாரியார் - இருபதாம் நூற்றாண்டு.
 • கவிஞராக - அ.கி. பரந்தாமனார் - இருபதாம் நூற்றாண்டு.
 • கவிபாடலாம் - கி.வா. சகந்நாதன் - இருபதாம் நூற்றாண்டு.
 • தொடையதிகாரம் - புலவர் குழந்தை - இருபதாம் நூற்றாண்டு.
 • குமாரபூபதீயம் என்னும் வண்ணப்பா யாப்பிலக்கணம் - ம.ரா. பூபதி - இருபதாம் நூற்றாண்டு.
 • கலைமணி பூபதீயம் - ம.ரா. பூபதி - இருபதாம் நூற்றாண்டு.
 • யாப்புநூல் - த. சரவணத்தமிழன் - இருபதாம் நூற்றாண்டு.
 • எளிதாகப் பாடலாம் - இராமு. இளங்குமரன் - இருபதாம் நூற்றாண்டு.
 • இலகு தமிழ் அய்ந்திலக்கணம் - மு. வேங்கடராமன் - இருபதாம் நூற்றாண்டு.
 • தொன்னூல் - இலக்கியப்படலம் - ச. பாலசுந்தரம் - இருபதாம் நூற்றாண்டு.
 • சிந்துப் பாவியல் - இரா. திருமுருகனார் - இருபதாம் நூற்றாண்டு.
 • பாவலர் பண்ணை - இரா. திருமுருகனார் - இருபதாம் நூற்றாண்டு.

அன்புடன்
அன்பன் செ. இராமலிங்கன்.
அன்பன் இராஜ. தியாகராஜன்.

இல்லம்/ 1/ 2/ 3/ 4/ 5/ 6/ 7/ 8/ 9/ 10/ 11/ 12--=:o:0:0:o:=--