பார்வையாளர் எண்:

பெயர்ச்சொல் வகைகள்

பெயர்ச் சொல்லென்பது யாது?

          உலகிலுள்ள பொருள்களின்/உயிர்களின் பெயர்களைக் கூறுவன பெயர்ச்சொல் எனலாம்.:-

 1. பண்புப் பெயர்:

            ஒரு பொருளின் குணத்தை, வடிவத்தை, சுவையை, நிறத்தை, சொல்வனவெல்லாம் பண்புப் பெயர்களாம். -

  எடுத்துக்காட்டு:-

  • வெண்மை, வட்டம், துவர்ப்பு

 2. ஆகுபெயர்:-

            ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அதனொடு தொடர்புடைய பொருளைக் குறிப்பது ஆகுபெயர். இந்த ஆகுபெயர் 19 வகைப்படும். பெரும்பாலும் வழக்கில் பயன்படுத்தப்படுபவை பொருளாகுபெயர், இடவாகுபெயர், பண்பாகுபெயர், உவமையாகுபெயர், தானியாகுபெயர் ஆகிய ஐந்தே.:-


  • "தாமரை போன்ற சேவடி - மலரை மட்டுமே சுட்டுகிறது"
   "அனிச்சம் போன்றவர் - மலரைக் குறிக்கிறது"
   "நகர் வென்றது - நகர்வாழ் மக்களை குறிக்கிறது"
   "வெள்ளை அடித்தான் - வெண்மையான சுண்ணம் குறிக்கிறது"
   "பாவை வந்தாள் - சிலைபோன்ற பெண்ணைக் குறிக்கிறது"
   "வஞ்சி வந்தாள் - வஞ்சிக் கொடியனைய பெண்ணாகும்"

 3. வினையாலணையும் பெயர்:-

            வினைமுற்றைப் போலிருக்கும் ஆனால் பெயர்சொல்லாக பயன்படுத்தப் பட்டிருக்கும். இச்சொல்லே வினையாலணையும் பெயர். "அவர் அறிந்தவர்" - இத்தொடரில் "அறிந்தவர்" வினைமுற்று. "அறிந்தவர் பரிசு பெறுவர்" - இத்தொடரில் "அறிந்தவர்" பெயர்ச்சொல்லாக பயன்படுகிறது.


  • எடுத்துக்காட்டு:
   "வித்தோன் மருக"
   "வள்ளியோர்ப் படர்ந்து",
   "தமது பகுத்துண்ணும்",
   "பொறுத்தானோடு ஊர்ந்தானிடை",
   "மிச்சில் மிசைவான்", "
   "தப்பியர் அட்ட களத்து",
   "கொடுப்பது அழுக்கறுப்பான்",
   "எண்ணிய எண்ணியாங்கு",

 4. தொழிற் பெயர்:-

            ஒரு செயலை உணர்த்தக் கூடிய காலங் காட்டாத பெயர்ச்சொல் தொழிற்பெயர் என வழங்கப் படும். இது முதனிலைத் தொழிற் பெயர், முதனிலைத் திரிந்த தொழிற்பெயரென இருவகைப்படும். முதனிலைத் தொழிற்பெயர் - (எ-கா) - எண் உரைத்திட வாரீர்
  இதில் எண்ணம் என்ற தொழிற்பெயர் எண்ணென்ற முதனிலையோடு வந்ததது. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் - (எ-கா) - கெடுதல் என்னும் தொழிற்பெயரின் முதனிலையான கெடு என்பது திரிந்த்து கேடு என்று வரின் அஃதெ முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
இல்லம்/ 1/ 2/ 3/ 4/ 5/ 6/ 7/ 8/ 9/ 10/ 11/ 12--=:o:0:0:o:=--