புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றறிக்கை விவரங்கள்

வாழும் இந்தியத் தமிழ்க் கவிஞர் மாநாடு

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தங்களின் 512/பில்க/க.கை/2003-04/13468 என்ற இலக்கமிட்ட சுற்றறிக்கை வாயிலாக கீழ் வரும் செய்தியைனை வெளியிட்டிருக்கிறது:-

"புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புதுவை அரசின் சார்பாக, இந்தியத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு ஒன்றினை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இம்மாநாட்டினை ஒட்டி வாழும் கவிஞர்களின் உலகத் தமிழ்க் கவிதை, வாழும் உலகத் தமிழ்க் கவிஞர்களின் கையேடு எனும் நூல்களை வெளியிட இருக்கிறது. இப்பெரும் முயற்சியை முன்னிட்டு, வாழும் முதன்மைக் கவிஞர்கள். மேற்குறிப்பிட்ட தொகுப்புகளில் தங்கள் கவிதைகளும், வாழ்க்கைக் குறிப்பும் இடம்பெறுவதற்காக, தங்கள் கவிதைகளில் தாங்கள் விரும்பிய ஐந்தினை பத்து பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்து, அவற்றுடன் தன்னிலை விளக்கக் குறிப்புடன், தற்போதைய சிறு நிழற்படத்துடன், "இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், எண்:
112, காமாட்சியம்மன் கோயில் வீதி, புதுச்சேரி - 605001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். கடைசி நாள்: 31.3.2005."

நிறுவனத்திலிருந்து அறிந்தவரை, நிறைய கவிஞர்களின் விவரங்கள் ஏற்கெனவே வந்துவிட்டன. ஆயினும் தமிழ்க் கவிஞர்கள் அனைவரின் விவரங்களும் இடம்பெற வேண்டும் என்ற பேரவாவினால், ஒருங்கிணைப்பாளர் திரு இரா. சம்பத் அவர்கள் மற்றும் புதுச்சேரி - மின்னிதழ் சார்பாக, இன்னுமொரு வாய்ப்பாக இணைய படைப்பாளிகள் இடையே இச்செய்தி சுற்றறிக்கைக்கு விடப்படுகிறது. அனுப்பவேண்டிய கடைசிநாள்: 25.4.2005.

இணைத்து அனுப்ப வேண்டிய தன்னிலை விளக்கக் குறிப்புப் படிவம்

(அ) பெயர் :

(ஆ) பிறந்தநாள் :

(இ) இடம் :

(ஈ) பெற்றோர் :

(உ) குடும்ப விவரம் :

(ஊ) கல்வித் தகுதி :

(எ) வெளியிட்ட கவிதை நூல்கள் :

(ஏ) சிறப்புத் தகவல்கள் :
பொறுப்பாசிரியர்,
புதுச்சேரி - மின்னிதழ்