|
சமூகச் சிந்தனை!
கொடியை மணமுடிக்கக் கூலி கேட்கும்
கொடுமை இளைஞரிடம் தோன்ற வேண்டா!
துடிக்க சிலுக்குவார்ப் பட்டி யூர்போல்
தூங்கும் குழவிகளைக் கொல்ல வேண்டா!
வெடிக்கின்ற பட்டாசு செய்து வீட்டின்
வெறுமை தனைப்போக்கும் வேலை விட்டு
படிக்கச் சிவகாசிப் பிள்ளை யெல்லாம்
பள்ளிக் கொழுங்காகச் செல்வ தென்றோ?
அச்செடுக்க
பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன்.
புதுச்சேரி
|