புதுச்சேரி - பாவரங்கப் பாடல்
இணையத்தமிழ் இலக்கியம்
பொறியெனும் கணினியி
லேது - நட
வாது - வெறுங்
கோது - என்றோர்
புரியாம லுளறிய போது - தமிழ்ப்
பொழிலால்வரு மண்மேவெளி யுலகேதொழ நெறியாயிடம்
புலம்பெயர்ந் துறைந்தவர் படைத்தார் - தமிழ்ப்
நலம்பெற வழியினைத் துடைத்தார்!
பொறியிய லறிஞனைப்
போலே - உழைப்
பாலே - பல
நூலே - எழப்
பொழுதெலா மலைத்ததி னாலே - யன்று
புறமோடகம் முறையாய்வரி வழுவாதுள மணிமேகலை
ப்
பொலிகவென் றிலக்கியம் பதித்தா - ரிவர்
தெளிதமிழ்ச் சுவையினை விதைத்தார்
செறிவா யிலக்கியந்
தொகுத்துப் - பிழை
செகுத்து - நன்றாய்
வகுத்து - மலைத்
தேனெனப் பருகிட உகுத்தே - இன்று
தெளிவாய்விரல் நுனியாலிணை தளமேதொட வினிதாய்த்தமிழ்
சிறியதி ரையினில் விருந்தாய்த் - தரும்
அறிவைவ ளர்க்க்கின்ற மருந்தாய்!
அறிவியல் பெற்றிட்ட
மங்கைத் - திரைத்
தங்கை - கணினி
நங்கைத் - தமிழ்
அன்னைக் களித்திட்ட பங்கை - நாமும்
அமுதத்தமி ழினையதினி லெழுதிபுவி யறியப்பல
ஆக்கப்ப ணிகளைச் செய்வோ - மினம்
மீட்கப்ப யன்களைக் கொய்வோம்!
பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன்
புதுச்சேரி
|