பொங்குக எங்கும் தமிழ்மணமே!


தமிழுக்கும் அமுதென்று பேர்
"புதுச்சேரி"
தமிழிலக்கிய மின்னிதழ் தொடக்க விழா அழைப்பிதழ்

          அன்புடையீர் நிகழும் தி.பி. இரண்டாயிரத்து முப்பத்தாறாம் ஆண்டு, மீனம் பதினான்காம் நாள் (27-03-2005) ஞாயிறன்று மாலை 4.00 மணியளவில், "புதுச்சேரி" மின்னிதழின் துவக்க விழா, புதுவை முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் (இரேணுகா திரையரங்கு எதிரில்) நடைபெற இருப்பதால் தாங்கள் அவ்விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்


தமிழ்த்தாய் வாழ்த்து: செல்வியர். சு. சீதாலட்சுமி, சீ. சீதாலட்சுமி, சகோதரிகள்

வரவேற்புரையும் நோக்கவுரையும் -
இராச. தியாகராசன், பொறுப்பாளர், புதுச்சேரி - மின்னிதழ்

விழாத் துவக்கவுரை - தமிழ்மாமணி திரு மன்னர்மன்னன்.

"புதுச்சேரி" மின்னிதழ் வெளியிட்டு வாழ்த்துரை வழங்குபவர்:
பேராசிரியர் திரு வெ. பிரித்திவிராஜ்,
இயக்குநர், தகவல் தொழில் நுட்பத்துறை, புதுவை.

தலைமைச் சிறப்புரை -
கவிமாமணி இலந்தை திரு சு. இராமசாமி, கனடா

"இணையத்தமிழ் இலக்கியம்" எனும் பாடுபொருளில் 16 வரிகளில் மரபுப்பா மலர்களால் வாழ்த்துப்பா வழங்கும் பாவலர் பெருமக்கள்:

திருவாளர்கள்

சந்தப்பாமணி புலவர் அரங்க நடராசன்
பைந்தமிழ்ப் பாவலர் கோ.புகழேந்தி
பாவலர் இளங்கோ பாண்டியன்
பாவலர் மா. இராமகிருட்டின பாரதி
புலவர் துரை.மாலிறையன்
பாவலர் தே. சனார்த்தனன்
கலைமாமணி கோவி. கலியபெருமாள்
சொல்லாய்வுச் செல்வர் வேல்முருகன்
பாட்டறிஞர் இலக்கியன்
முனைவர் பேரா. உரு. அசோகன்
பாவலர் புதுவை கோ. பாரதி
புலவர் பூங்கொடி பராங்குசம்
முனைவர் சுந்தரமுருகன்.
பைந்தமிழ்ப் பாவலர் இளமுருகன்
பாவலர் மணிமேகலை குப்புசாமி

மின்னிதழைப் பாராட்டி வாழ்த்துரை வழங்குவோர்:
திருவாளர்கள்
முனைவர் இரா. திருமுருகனார், புதுச்சேரி
("தெளிதமிழ்" ஆசிரியர்)
இலக்கிய வித்தகர் திரு வெ. அரிகிருட்டினன், சென்னை
புலவர் மு. இறைவிழியன், புதுச்சேரி
("நற்றமிழ்" ஆசிரியர்)
கலைமாமணி புலவர் புதுவை நாகி, புதுச்சேரி
தமிழ்மாமணி புலவர் சீனு. இராமச்சந்திரன், புதுச்சேரி
கலைமாமணி கல்லாடன், புதுச்சேரி
பாவலர் க. தமிழமல்லன், புதுச்சேரி
("வெல்லும் தூயதமிழ்" ஆசிரியர்)

நன்றியுரை -
புலவர் செ. இராமலிங்கன், பொறுப்பாசிரியர்,
புதுச்சேரி - மின்னிதழ்.

அனைவரும் வருக வருகவென அன்புடன் அழைக்கிறோம்.