இலக்கியச் செய்திகள் - சூன்-2005 - புதுவையிலும், இணையத்திலும்  
   
இலக்கிய நிகழ்ச்சிகள்


கவிமலர் கலா விசு கவிஞர் பூவை. செங்குட்டுவனுக்கு நினைவுப் பரிசளித்தல்

கவிதை வானில் கவியரங்க விழா

இடம்: ¦ºøÅ¿¡¾ý ÅçÅüÒ þøÄõ
புதுச்சேரி
நாள்:
11.06.2005
நேரம்: மாலை ¬Ú மணி

திரை இசைப்புகழ் கவிஞர் பூவை.செங்குட்டுவன் தலைமையேற்க, கவிமதி மரிய தெரெசா, சென்னை முன்னிலை வகிக்க, பாட்டறிஞர் இலக்கியன் வரவேற்புரை வழங்க, கவிதை வானில் கவியரங்கம் இனிதே நடந்தேறியது. அவ்வமயம் பாவலர்கள் "எதையும் தாங்கும் இதயம் இருந்தால்" என்ற பாடுபொருளில் பாடல்களை யாத்தளித்தனர்.


இளைஞர் அமைதி மையத்தின் இளைஞர்க்கான மருத இராமலிங்கனார் விருதை கவிஞர் யுகபாரதி, மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் தமிழ்த்திரு ஏ.வி. சுப்ரமணியனிடம் பெறுதல், அருகில் மாண்புமிகு முன்னாள் கல்வியமைச்சர் தமிழ்த்திரு எஸ்.பி. சிவக்குமார்(இடது) மருத்துவர் நல்லாம் (வலது)

மருத இராமலிங்கனார் விருது வழங்கும் விழா - 2004

இடம்: இராம் பன்னாட்டு உணவகம், புதுச்சேரி
நாள்:
16.06.2005
நேரம்: மாலை ஆறு
விழாக் குழுவினர்: புதுவை இளைஞர் அமைதி மையம், புதுச்சேரி.

2004ஆம் ஆண்டுக்கான மருத இராமலிங்கனார் விருதுகள் பல்வேறு துறைகளில் மனிதநேயத் தொண்டு புரிந்த நல்லுள்ளங்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வமயம்,
செவாலியே மருத்துவர் நல்லாம் - முன்னிலை வகிக்க
மாண்புமிகு மாவட்ட நீதியரசர் ஜி.பேட்ரிக் - தலைமை ஏற்க
மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்தலைவர் ஏ.வி. சுப்ரமணியன்
சிறப்பு விருந்திராக சிறப்புரையாற்ற
மாண்புமிகு முன்னாள் கல்வியமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் ஆன
எஸ்.பி.சிவக்குமார், தலைமை விருந்தினராக சிறப்புரையாற்ற
தமிழ்மாமணி புலவரேறு அரிமதித் தென்னகனார், திரு கே. வெங்கட்டாசலம் (காவல்துறை கண்காணிப்பாளர்), திரு க. ஸ்ரீ,காந்த் (எழுத்தாளர், சன் தொலைக்காட்சி), திரு பாரீஸ் ஜமால் (எழுத்தாளர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்க விழா இனிதே நடந்தேறியது.
திரு புதுவை யுகபாரதி, திரு எம்.தேஷ், செல்வி ஏ.ஸ்ரீஆனந்தசாம்பவி, திரு ஜெ.சந்தோஷ்குமார், கவிஞர் ந.இராமதாஸ், திரு எஸ்.வி.அய்யர், திருமதி மீனாட்சிதேவி, பவனானி, திரு அரங்க. வாழுமுனி, திரு ச.சிவசுப்ரமணியன், திருமதி கி.திலகவதிவேலு ஆகியோர் விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டனர்


சிறுவர் இலக்கிய சிறகம் மற்றும் நண்பர்கள் தோட்டம் நடத்திய அரிமதி தென்னகனாரின் நூற்று இருபத்தைந்தாவது நூல் வெளீயீட்டு விழாவில் ஒரு காட்சி

தமிழ்மாமணி புலவரேறு அரிமதி தென்னகனாரின்
125ஆவது நூல் வெளியீட்டு விழா


தமிழ்மாமணி புலவரேறு அரிமதித் தென்னகனாரின் 125ஆவது நூலான வெல்லும் "தமிழியக்கம்" நூல் வெளியீட்டு விழா
27-05-2005 வெள்ளி மாலை ஆறு மணியளவில் புதுச்சேரி கூட்டுறவு ஒன்றிய வளாகத்தின் கருத்தரங்க அறையில் இனிதே நடைபெற்றது. அவ்வமயம் உணர்ச்சிப் பாவலர் உசேன் வரவேற்புரை வழங்க, பாசறைப் பாவலர் தி. பழனிச்சாமி தலைமையேற்க, முத்துப் பதிப்பகத்தின் மு. இலட்சுமணனார் முன்னிலை வகிக்க, பாவலர் வில்லியனூர் பழநி நூலினை ஆய்வு செய்து உரை நிகழ்த்த, முதல் நூலை திருவளர் ப.அ.பார்த்தசாரதியும், திருவாட்டியார் நவநீதம் பார்த்தசாரதியும் பெற்றுக் கொள்ள, நண்பர்கள் தோட்டம் ப.திருநாவுக்கரசு, பாவலர் சுந்தரமுருகன், புதுவை யுகபாரதி ஆகியோர் நூலினை காணிக்கையாக பெற்றுக் கொள்ள, விழா இனிதே நடந்தேறியது.
வேலாயுதம்பாளையம் - கருப்பண்ணன் - செல்லம்மாள் இலக்கிய அறக்கட்டளை
எட்டாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்

கவிதைப் போட்டி
"அன்னைத் தமிழ் காக்க ஆர்த்தெழு" என்ற தலைப்பில் இருப்பத்துநான்கு அடிகளுக்கு மிகாமல் எந்தப்பா இனத்திலேனும் பாடல் ஒன்றை முழு வெள்ளைத்தாளில் தெளிவாக எழுதி அல்லது தட்டச்சு செய்து இரண்டு படிகள் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் கவிதைகளை நூலாக்க அறக்கட்டளைக்கு உரிமையுண்டு. சிறந்ததாக தேர்வு செய்யப்படும் பாடலுக்கு முதல் பரிசாக ஆயிரம் வெண்பொற்காசுகளும், இரண்டாம் பரிசாக அய்நூறு வெண்பொற்காசுகளும் பரிசளிக்கப்படும்.


கவிதை நூல் போட்டி
2003ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை வெளிவந்த அச்சிட்ட கவிதை நூல்கள் எழுதிய ஆசிரியராலோ, அல்லது வெளியிட்ட பதிப்பகத்தாலோ கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படலாம். நூல்கள் இரண்டுபடிகள் அனுப்பிவைக்கப்பட வேண்டும். கவிதைகள் எந்தப்பா இனத்திலேனும் இருக்கலாம்; ஆனால் மரபுப்பாவாக இருத்தல் வேண்டும். சிறந்த கவிதை நூலுக்கு ஆயிரத்து அய்நூறு வெண்பொற்காசுகள் பரிசளிக்கப்படும்.

நூல்களும், கவிதைகளும் அனுப்ப வேண்டிய கடைசிநாள்: செப்டம்பர் திங்கள் பத்தாம் நாள் 2005. அனுப்ப வேண்டிய முகவரி:
க. துரையரசன்
23 கலையகம், முல்லை நகர்
வேலாயுதம்பாளையம்
- 639117
கரூர் மாவட்டம்

விடுதலை வீரர், இரத்தினவேலு முதலியார் - வெங்கடேசன் சைவ இலக்கிய அறக்கட்டளையின் இரண்டாம் சொற்பொழிவு

இரத்தினவேலு முதலியார் - வெங்கடேசன் சைவ இலக்கிய அறக்கட்டளையின் இரண்டாம் சொற்பொழிவு கால்நடைப் பராமரிப்பு கருத்தரங்க அறையில் 7.6.2005 செவ்வாயன்று மாலை ஆறு மணியளவில் நடைபெற்றது. அவ்வமயம் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரியின் இயக்குநர் பேராசிரியர் திரு மருதநாயகம், அவர்கள் வரவேற்புரை வழங்க, பேராசிரியர் திரு ஆ. சிவலிங்கனார் தலைமையேற்க, புதுவைத் தமிழ்ச்சங்க சிறப்புத் தலைவர் சேது. முருகபூபதி வாழ்த்துரை வழங்க, அறக்கட்டளையின் நோக்கங்களை திரு இரத்தின வெங்கடேசன், சிங்கப்பூர் அவர்கள் விளக்க, முனைவர் திரு சு. திருநாவுக்கரசு அவர்கள் "திருமுறை காட்டும் பெருநெறி" என்ற பொருளில் சொற்பொழிவு நிகழ்த்த, மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தின் முனைவர் இரவிசங்கர் நன்றியுரை வழங்க, விழா இனிதே நடைபெற்றது.


கவிஞர் புதுவைச் சிவம் இலக்கிய பேரவை அறக்கட்டளையின் இரண்டாம் சொற்பொழிவில் அவரது திருமகனார் திரு சிவ. இளங்கோ உரையாற்றுதல்

"கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை அறக்கட்டளை இரண்டாம் சொற்பொழிவு

இடம்: கருத்தரங்க அறை, தலைமைச் செயலகம்
நாள்:
24.04.2005
நேரம்: காலை பத்து மணி
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற கவிஞர் புதுவைச் சிவம் இலக்கியப் பேரவை அறக்கட்டளையின் இரண்டாம் சொற்பொழிவு, பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் தலைமையில், முனைவர் ப. மருதநாயகம் இயக்குநர் வரவேற்புடன், பாவலர் சிவ. இளங்கோ நோக்கவுரையுடன், முனைவர் அ. அறிவுநம்பியின் "நாடகவாணர் சிவம்" என்ற பொருள் பற்றிய சிறப்புரையுடன், முனைவர் மு. சுதர்சனனின் நன்றியுரையுடன் இனிதே நடைபெற்றது.

பாடல் படைத்திடுக - வஞ்சிவிருத்தம்- 04
நற்றமிழ் இதழின் மரபுப்பா பயிற்சி

காட்டு
இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கண்ணினாய்! (யா.அ.க. மேற்கோள்)

(அ) ஒவ்வொரு அடியிலும் மும்மூன்று சீர்கள் இருத்தல் வேண்டும்
(ஆ) ஒவ்வொரு அடியின் சீரமைப்பு முறையே:
புளிமா + கூவிளம் + கூவிளம் என்றிருக்கவேண்டும்
(இ) இவ்வாறமைந்த நான்கடிகள் அடியெதுகை
பெற்றிருக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: சூன் திங்கள்,
30, 2005
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், "நற்றமிழ்",
எண்: நாற்பத்து மூன்று, அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு
புதுச்சேரி -
605005.

-புலவர் அரங்க. நடராசன்

நன்னன் அண்ணல் நினைவுப் பரிசுப் போட்டிகள்
பாவும், சிறுகதையும்

அன்புசால் தமிழன்பர்களே! தி.பி.
2037 (கி.பி.2006) ஆண்டிற்கான நன்னன் அண்ணல் நினைவுப் பரிசுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் அவர்களது விருப்பத்தை போட்டிக்குழுவினருக்கு கீழ்க்காணும் முகவரிக்குத் தெரிவிப்பதன் வாயிலாக தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்விதம் தெரிவிக்கும் போதில் அத்துடன் தங்களது முகவரி எழுதப்பட்டதும், அய்ந்து உருவா அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டதுமாகிய அஞ்சல் உறை ஒன்றையும் சேர்த்தனுப்பினால் போட்டிக்குரிய முழுவிவரங்களும், விதிமுறைகளும் போட்டிக்குழுவினரால் அனுப்பி வைக்கப்படும். பாவும், சிறுகதையும் ஆகிய இரு போட்டிகளுக்கும் உரிய தனித்தனி முதல் பரிசுகளாக உருவா பத்தாயிரமும், இரண்டாம் பரிசுகளாக உருவா ஆறாயிரமும், மூன்றாம் பரிசுகளாக உருவா நான்காயிரமும் அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:
நன்னன் அண்ணல் நினைவுப் பரிசுப் போட்டிகள் தி.பி.
2037
'சிறு குடி', 22 அய், முதல் தெரு, அரங்கராசபுரம், சைதாப்பேட்டை
சென்னை -
600 015
தொலைபேசி: 22350193

பாவரங்கம் பற்றி புதுவைத் தமிழ்ச் சங்க அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் பத்து தேதிக்குள் புதுவை
பாவலர்களிடமிருந்து பாடல்கள் பெறப்பட்டு
அவை ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமை
அன்று தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாவரங்கமாக
படிக்கப்படுமென்றும், சிறந்த பாடல்களுக்கு
பரிசுகளும் வழங்கப்படுமென்றும் புதுவைத் தமிழ்ச்
சங்கத்தலைவர் தமிழ்மாமணி மன்னர் மன்னன்
அவர்கள் அறிவித்தார்.
படைப்பினையனுப்ப வேண்டிய கடைசி நாள்:
ஒவ்வொரு மாதமும் முதல் பத்து தேதிக்குள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்ச் சங்க கட்டிடம்,
40 அடி சாலை, வெங்கட்ட நகர், புதுச்சேரி - 605011.
தெளி தமிழின் பாவலர் பரிசுத் திட்டம் ஏழு

எழுசீர் மண்டிலம் (விருத்தம் என்பதை மண்டிலம் என்று குறிப்பிடுகின்றனர்)
விளம் - மா - விளம் - மா - .
விளம் - விளம் - மா
குறிப்பு: விளச்சீரின் இடத்தில் அருகி மாங்காய்ச்சீரும் வருவதுண்டு.
என்ற அமைப்பில் ஒன்று அய்ந்தாம் சீர்களில் மோனை அமைய, அடியெதுகையோடு அமைந்த பாடலொன்றினை விரும்பிய பொருளில் இயற்றி வரும் சூலை நான்காம் நாளுக்குள் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
காட்டு
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளம் துடித்தே
னீடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

முகவரி:
முனைவர் இரா. திருமுருகன்
62 மறைமலையடிகள் சாலை
புதுச்சேரி -
605105
தொலைபேசி: 2699485


அரு. கோபாலன் தமிழ் விழிப்புணர்வு மாநாட்டில் உரையாற்றுகிறார்.

தமிழ் விழிப்புணர்வு மாநாடு

புதுவை சமரச சுத்த சன்மார்க்க சங்கக் கட்டடத்தில்,
24.04.2005 ஞாயிறன்று மாலை ஆறு மணியளவில் புதுவை தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவினரின் நடத்திய தமிழ் விழிப்புணர்வு மாநாட்டில், பைந்தமிழ்ப்பாவலர் கோ.புகழேந்தி, நூற்கடல் தி.வே. கோபாலையர், முனைவர் இராச. திருமாவளவன், பாவலர் இளங்கோ பாண்டியன், பைந்தமிழ்ப்பாவலர் இரா. இளமுருகன், தமிழ்த்திரு பெ. பராங்குசம், பேராசிரியர் ம.இலே. தங்கப்பா, பேரா. அ. பசுபதி, திரு கோ. தமிழுலகன், புலவர் திரு வி. திருவேங்கடம், திரு இரா. செம்பியன், முனைவர் இரா. திருமுருகன், முனைவர் அரு. கோபாலன், புலவர் அரங்க. நடராசன், திரு சி. நாகலிங்கம், புலவர் ஆறு. அரங்கண்ணல், முனைவர் உரு. அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது. அவ்வமயம், இலக்கணச் செம்மல் சுந்தர குமரனாரின் நினைவுப்பரிசுக்குரிய இலக்கணத் தேர்வுகளில் பரிசு பெற்றவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டன. சூரிய விசயகுமாரி- துரை.மாலிறையன் அறக்கட்டளை சார்பாகவும் மாணவ மாணவியர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா

புதுச்சேரி - மின்னிதழின் சார்பாக மகாகவிக்கு
வீர வணக்கமாக
11.12.2004
அன்று புதுச்சேரி மற்றும் இணையத்தின் பாவலர்கள் யாத்தளித்த
மரபுப் பாக்களை பெற்று வலையேற்றம் செய்தோம்
பாடல்களூக்கான இணைப்புத்தொடர்:
மாகவி பற்றிய பிறந்த நாள் பாடல்கள்

பொறுப்பாசிரியர், புதுச்சேரி - மின்னிதழ்

கவியரங்கத் துவக்க விழா - நாள்18.10.2004.
"கவிதை வானில்" என்னும் கவியரங்க விழா
நாற்பது அடி வெங்கட்ட நகர் சாலையிலமைந்த
தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில்
அறிவுசால் திரு மன்னர்மன்னன் தலைமையேற்க,
புரவலர் திரு வேல்சொக்கநாதன் அனுப்பி வைத்த
வாழ்த்துரையுடன் திருமதி கலாவிசு அவர்களின்
நோக்கவுரையுடன் கலைமாமணி நாகி,
தமிழ்மாமணி சீனு இராமச்சந்திரன்
திருமதி வாசுகி இராஜாராம்,
திருமதி இரேணுகாம்மாள்
திரு இராமகிருட்டின பாரதி இவர்களின் வாழ்த்துரையுடன்
புலவரேறு திரு அரிமதி தென்னகனார்
கவியரங்கு தலைமை தாங்க
இன்னும் பல பல்சுவைக் கவிஞர்களின் தமிழ்த் தேரோட
இனிதே நடந்தேறியது. கவிதை வானிற் சிறகடித்தனர்
புதுவைத் தமிழ்மக்கள்! ஒவ்வொரு மாதமும் இரண்டாம்
சனிக்கிழமை கவிதாயினி திருமதி கலாவிசு அவர்களின்
இல்லத்தில் "கவிதை வானில்" கவியரங்கம்
நடைபெறுமென்று அறிவிக்கப் பட்டது

மேலும் விவரங்களுக்கு முகவரி:
எண்: ஆறு, வேலாயுதம் பிள்ளைத் தெரு
(இரேணுகா திரையரங்கருகில்)
முத்தியால் பேட்டை, புதுச்சேரி
தொலைபேசி:

செல்லிடப்பேசி:

கவிதை வானில் கவியரங்க விவரங்கள்