மலரினும் மெல்லியது....
புதுக்கவிதை
பூத்து குலுங்கிய பூக்களால் பொங்கி ததும்பிய ஒரு கொடி
எக்கி பறித்தாய் நீ சில பூக்கள் - உனக்கு
எட்டாத உயரத்தில் பல பூக்கள்
சீண்டாது நீ போனபின்
துயரத்தில் விழுந்த அப்பூக்கள்
உயரத்திலிருந்து விழுந்து
மாண்டன தற்கொலை செய்து
இத்தனை மெல்லியதா பூக்கள் என
இறந்த பூக்களிலிருந்து
இரண்டொன்றை சேமிதேன்
குளித்த தலை, வாசலில்
துவட்டி கொண்டிருகிறாய் நீ
பூவையின் வாசத்தை
பூவின் வாசமாய் எண்ணி
வட்டமிட்டன உன்னை சுற்றி
வண்ணத்து பூச்சிகள்
ஒவ்வொரு பூவிலும்
ஒன்றே வாசம்
பூவையே உன்னில் எப்படி, பல
பூவின் வாசம் இப்படி, என
எனக்கே இன்னும் புலபடாதபோது
ஏமாந்துபோனது வண்ணத்துபூச்சிகள்
என்பதில் வியப்பேது?
அசைந்த பட்டாம்பூச்சியின் அதிர்வினால்
உடைந்த கூந்தல் கண்டு அதிசயித்தேன்
பூவை விட மெல்லியவளா! இந்த
பூவை என்ன தேவதைக்கு பிறந்தவளா!
அடிக்கடி மன்ணில் பிறக்குமாம் தேவதைகள்;
அப்படி பிறந்தவள்தான நீயும்!
எண்ணிப் பார்தேன் வானில்
ஏதோ ஒரு நட்ச்சத்திரம் குறையக் கண்டேன்;
எங்கே அது என்று தேடியபோது
என் கண்ணில் உன்னை கண்டேன்
மண்ணில் விழும் நட்ச்சத்திரமெல்லாம்
மண்ணாகிவிடும் எண்றே படித்திருந்தேன்
மண்ணில் விழுந்த நட்ச்சத்திரமொன்று
பெண்ணானதோ என உனைக்கண்டு வியந்தேன்
ஒவ்வொரு பூவிடமும் வினவினேன்;
உலகின் மென்மையான பூவை அறிவீரா என்று;
ஒவ்வொரு பூவும் பொய்யே உரைத்தது;
அதுவே மென்மையான பூவென்று!
உன் பட்டு கரம் பற்றி ஏறியும்,
உன் கூந்தல் சரம் தொற்றி ஏறியும்,
இவளின் மென்மை பற்றி பேசவில்லை;
இந்த நயவஞ்சக பூக்கள்!
தேவதைகள் இருக்குமிடம்
தென்றல் சுற்றிவருமாம்
சில நாட்களாய் இங்கே
சில்லென்ற காற்று இல்லை
காற்றை அழைத்து காரணம் கேட்டேன்;
தேவதை ஒருத்தியின் விலாசத்தை,
தொலைத்திட்டதாய் காற்று அழுதது!
அன்பே உன் விலாசம் தந்து
ஆறுதலாய் நல்வார்த்தை சொல்லி
அனுப்பி வைத்தேன் உன்வசம்
நான் அனுப்பிய தென்றல் நலம் விசாரிக்குதா தினம் உன்னை?
மென்மை என்பதின் அர்த்தமானவளா , சகியே நீ;
மென்மைக்கு உவமையானவளா!
மூச்சுபட்டால் வாடும் தொட்டாச்சிணுங்கி நீ;
முகரபட்டால் வாடும் அனிச்ச மலர் நீ;
மென்மை உனக்கு வரமா வருத்தமா?
திரு காசி இராஜா
புதுச்சேரி
|