"கவிதை வானில்"
கவியரங்க விவரங்கள்

          "கவிதை வானில்" - பாவலர் திருமதி கலாவிசு அவர்களின் பெருமுயற்சியின் விளைவாக புதுவையின் தமிழன்பர்களுக்கு மற்றுமோர் அரிய தமிழ்த்தேனமுதாய் "கவிதை வானில்" எனும் பாவரங்கத் துவக்கவிழா 18.10.2004 அன்று வேங்கட நகர், அடி சாலையில் அமைந்த தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில், அறிவுசால் திரு மன்னர்மன்னன் தலைமையேற்க, புரவலர் திரு வேல் சொக்கநாதன் அனுப்பி வைத்த வாழ்த்துரையுடன் திருமதி கலாவிசு அவர்களின் நோக்க உரையுடன், கலைமாமணி நாகி, தமிழ்மாமணி சீனு இராமச்சந்திரன், திருமதி வாசுகி ராஜாராம், திருமதி இரேணுகாம்மாள் திரு இராமகிருட்டின பாரதி இவர்களின் வாழ்த்துரையுடன் புலவரேறு திரு அரிமதி தென்னகனார் பாவரங்கத் தலைமை ஏற்க, இன்னும் பல பல்சுவைப் பாவலர்களின் தமிழ்த் தேரோட இனிதே நடந்தேறியது.

          இக்கவியரங்கம் ஒவ்வோரு மாதமும் இரண்டாவது சனிக் கிழமையன்று, பாவலர் திருமதி கலாவிசு அவர்களின் இல்லமான, எண்: ஆறு, வேலாயுதம் பிள்ளைத் தெரு (இரேணுகா திரையரங்கருகில்), முத்தியால்பேட்டை புதுச்சேரி என்ற முகவரியில் தொடர்ந்து நடைபெறும் என்றும், நன்கு யாத்தளிக்கப்படும் இளைய தலைமுறைப் பாவலர்களின் பாக்களுக்கு பரிசில்களும் வழங்கப்படுமென்றும் அறிவிக்கப் பட்டது.

          திங்கள்தோறும் இரண்டாம் சனிக்கிழமை அன்று நடக்கும் இப்பாவரங்கம் பற்றிய விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: