பாவேந்தர் பாட்டெடுத்துப்
.....பாருக்குநாம் சொல்லிவிட்டால்
தரவேதும் வாராதடீ -கிளியே!
.....தன்மதிப்புக் கூடுமடீ!
முடைநாற்றம் வீசிநின்ற
.....மூடச்செயல்கள் தம்மை
இடைமுறித்துப் போட்டாரடீ - கிளியே!
.....இன்ன லொழித்தாரடீ!
கள்ளரென்றும் கண்டரென்றும்
.....காழ்கொள் மறவரென்றும்
பள்லர் பறையரென்றும் - கிளியே!
.....பகர்வ தொழித்தாரடீ!
பாவேந்தர் பாட்டதனால்
.....பண்பா ருலகத்தை
நாவேந்திப் பாடிடுவோம் - கிளியே!
.....நன்மை பிறக்குமடீ!
அச்செடுக்க
கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி - 9