தாயே சுமையா?


ஆசிரியப்பா

கருவில் கவனமாய்க் கருத்துடன் சுமந்தே
உருவங் கொடுத்தே உணவு மூட்டிக்
கருத்தாய் நாளும் கண்ணாய் வளர்த்தே
இருளில் காத்தே இன்னல் விலக்கி
அருமையாய் வளர்த்தே ஆளா யாக்கிய
பெருமைக் குரிய போற்று மன்னைத்
தன்னந் தனியே தள்ளா வயதில்
கண்ணின் மணியாய்க் காத்திடும் வேளையில்
தோளைத் தொட்டிலாய்த் தந்த தாயை
வெளியே போவென விரட்டுதல் முறையோ?



பாவலர் வ. பழனி
புதுச்சேரி