அறுசீர் விருத்தம்
திரைப்படம்
நடிக்கும் நடிகர் படத்தினையே
நாட்டில் நாளும் பணக்கொடுத்தே
துடிக்கும் மக்கள் கூட்டத்தைத்
தொடர்ந்த நிலையு மிங்கேயும்
படிக்கும் வயதில் செயலினையே
பாழாய்ப் படுத்துந் திரைப்படத்தைத்
கடிந்து விரட்டி எந்நாளும்
கருத்தாய் எதிர்த்து நின்றிடுவோம்!
இடிக்கு மோசை இசையாவும்
இன்ன தென்று புரியாமல்
படிக்கும் பாட்டுத் தமிங்கலமாய்
பாடும் பாட்டைக் கேட்டிங்கே
துடிக்கும் நெஞ்சத் துயரங்கள்
தொடரு மவல மினியுமேன்?
வெடிக்கும் நிலையு மிதனால்தான்
வேத னைதா னெழுகிறதே!
பாவலர் வ. பழனி
புதுச்சேரி
|