அறுசீர் விருத்தம்
உயிர்த் துளி
உலகம் உதித்த நாள்முதலாய்
உயிரின் உணவாம் தண்ணீரை
பலரும் போற்றி வந்தனரே,
பயனும் இதனால் பெருகியதும்
சிலரின் தீய செயல்களினால்
சிறந்த நீரும் கெட்டதுவே
நலன்கள் நிறைந்த நன்னீரை
நாமும் காத்துத் துணையிருப்போம்!
பசுமை நிறைந்த தாவரங்கள்
பார்க்க பார்க்க அழகாகும்
விசும்பின் கூட்டம் கருத்தாலே
விரைவாய் மழையும் வந்துவிடும்
காசு கொடுத்துக் கேட்டாலும்
கடவுள் மழையைத் தரமாட்டார்!
மாசு நீங்கிய தண்ணீரே
மாந்தர் வாழ அவசியமே!
பாவலர் வ. பழனி
புதுச்சேரி
|