பஃறொடை வெண்பா

பாவம் பூசணிக்காய்!


மாதந் தவறாமல் வந்திடும் அமாவாசை;
வேதம் பகர்ந்ததென்று மேதினியில் யார்க்கும்
உணவாகும் பூசணியை ஊர்முழுது மென்றும்
பணங்கொடுத்து வாங்கியே பாதைகளில் போட்டே
உடைத்திடும் பாவத்தினை வோசையின்றி மாந்தர்
படைத்திடும் தீச்செயல் பார்!



பாவலர் வ. பழனி
புதுச்சேரி