ஆசிரியத் தளையான் வந்த ஆசிரியத் தாழிசை
உலகில் தென்படும் நிகழ்வுகள் யாவும்
பலரும் அறியும் வண்ணம் பாங்காய்க்
காலை மாலையில் கைகளில் தவழும்
எங்கோ நடக்கும் நல்லவை கெட்டவை
இங்கே நாமும் இருக்கையில் அமர்ந்தே
பாங்குடன் படித்தே அறிவினை வளர்க்கும்
எத்தனை விதமாய் ஏட்டில் நாளும்
இத்தனை விதமாய் விந்தை செய்யும்
அத்துணை நாளிதழ் படித்தே உயர்வோம்!
அச்செடுக்க
பாவலர் வ. பழனி
புதுச்சேரி