பாரதி பிறந்தநாள் பாடல்

நாட்டின் உயர்வுக் காவலன் பாரதி!


கேட்டை வளர்க்கும் நூறாம் சாதிகள்;
பூட்டை திறக்கும் புதிய சாவிதான்
பாட்டிற் சிறந்த பாவலன் பாரதி;
நாட்டின் உயர்வுக் காவலச் சாரதி!
வேதம் புதிதாய் செய்க என்றான்;
பாதகம் பிறந்தன தவறுநாம் செய்ததால்!
புலவன் கண்ட விண்ணுயர்க் கனவுகள்;
உலகோர் கடனாய் ஆக்குதல் முறையே!



பாவலர் செ. அரிப்பிரியா,
புதுச்சேரி