பாரதி என்றொரு கவிஞன்
பாரதிர நின்றிட்ட இளைஞன்
தூரத்தில் தெரிந்திட்ட கவிநயம்
தீரத்தில் தெரித்திட்ட கலைநயம்
காலத்தைக் கடந்துவளர்ந் திட்டான்
காவியமாக எம்மில்நிலைத் திட்டான்
பாமரர் பாவிகளாய் நில்லாமல்
தாமருள் செய்திட்ட சோதியவன்
நாமமது தமிழரெனக் கொண்டதனால்
நாமுமிங்கு போற்றிடுவோம் பாரதியை
அச்செடுக்க
பாவலர் புசுபா கிறிசுடி
அமெரிக்கா