புதுவை ஏரிகள் புனரமைப்புத் திட்டம்
பொதுப் பணித்துறை, புதுச்சேரி.
 
   
 
வருங்கால வாரிசுகளுக்கு நீரின் இன்றியமையாமையை
விளக்கும் வகையில் "தளிர்களின் தண்ணீர் தாகம்" என்ற
நிகழ்ச்சியினை புதுவை அரசின் பொதுப்பணித் துறை
ஏற்பாடு செய்து குழந்தைகளுக்காக ஓவியப் போட்டிகள்,
முழக்க சொற்றொடர் உருவாக்கல், இசைப் போட்டிகள்,
மாபெறும் விழிப்புணர்வுப் பேரணி ஆகிய நிகழ்ச்சிகளை,
அக்டோபர் இருபதாம் நாள் புதனன்று நடத்தியது. சுமார்
அயிந்தாயிரம் குழந்தைகள் பங்கேற்கிறார்கள். சற்றே
மாறுபாடாக, குழந்தைகளுக்கான இசைப் போட்டிக்காக
"நீர்" என்ற தலைப்பில், எட்டு வரிகளில் அக்டோபர் திங்கள்
பதினைந்தாம் நாள், புதுவைக் கவிஞர்கள் பாவரங்கிலேயே
அளித்தனர், இது தவிர "(ஏரிகளில்) நீர் சேமிப்பும், விழிப்பு
உணர்வும்" என்ற தலைப்பில் பதினாறு வரிகளுக்கு மிகாமல்
மரபு (அ) புதுக் கவிதைகளை கவிஞர்கள் எழுதியனுப்ப
"திட்ட இயக்குநர், ஏரி புனரமைப்புத் திட்டம், பொதுப்பணித்
துறை, புதுவை" அவற்றைத் தொகுத்து "உயிர்த்துளி" எனும்
புத்தகமாக வெளியிட்டார்