எங்கள் தங்கம் இனிது வாழ்க!

(சொல்லாய்வுச் சொல்வர் திரு சு. வேல்முருகனுக்கு வாழ்த்துப் பாடல்)


சுப்பராயன் செங்கேணி ஈன்ற
.....சூதுவாது அறியாத சூரர்!
அப்பர்தம் வரலாற்றை ஆய்ந்தே
.....அவனிக்கே வழங்கிட்ட சீலர்!
உப்பிட்ட வரையெல்லாம் எண்ணி
.....உழைத்திடுவார் எதிர்பார்ப்பு மின்றி!
எப்போதும் களஆய்வு செய்வார்;
....ஏற்றமுடன் நூலாக்கி வார்!

கருவினிலே செந்தமிழைக் கற்று
.....கற்றறிந்த மேலோராய் நின்றார்!
உருவினிலே கருநிறத்துத் தங்கம்;
.....ஊருக்கே உழைத்திட்ட சிங்கம்!
திருவக்க ரைக்கதையைத் தீட்டித்
.....தீந்தேனாய்ப் பருகிடவே தந்தார்!
முருங்கப்பாக் கத்தினிலே வாழ்வார்;
.....முத்தான இலக்கியங்கள் செய்தே!


பாவலர் மு. சச்சிதானந்தம்
புதுச்சேரி