காலம் நமக்களித்த கற்பனை யூற்றவன்
ஞாலம் புகழ்கவி நாயகன் - சீலமுடன்
ஆலம் விழுதாக அன்பூன்றி மக்களுக்குப்
பாலமாய் வாழ்ந்தானைப் பார்.
"தாளம் படுமோ? தறிபடுமோ? யார்படுவார்?
நாளொன்று போயின" தென்றுரைத்த - காளமேகப்
பாவலன் பாரதி பைந்தமிழ்த் தொண்டினை
ஆவலுடன் அன்பொழுகக் கூறு.
தெய்வம் பலப்பலச் சொன்னான்; தெரிந்தவனே
உய்யும் வகைகாட்டி ஒன்றென்றான் - மெய்ப்பொருள்
உய்த்துணர்ந்து கொள்வாய் உனதறிவால்; பாரதிபார்
பொய்த்துயிர் வாழாதே போ.
அச்செடுக்க
தமிழ்மாமணி புலவர் சீனு. இராமச்சந்திரன்
புதுச்சேரி-9