நேரிசையாசிரியப்பா
பாரதி யென்னும் பண்பு மனிதன்
புதுவை வசமதில் இருந்தாய் உன்னில்
புதுத்தமிழ் பாக்களை புனைந்தாய் மண்ணில்!
தீச்சுடர் வார்த்தையால் தீண்டியே விடுதலைப்
பேச்சின் வேட்கையை போற்றிய கவிநீ!
சாத்திரம் சாதியை சாடியேப் புதுப்புது
பாத்திறம் படைத்த பாவல! வாழ்கவே!
அச்செடுக்க
பாவலர் இயா. ஜெயஇருதயநாத் ஸ்டெல்லா சிசோரன்
புதுச்சேரி