பஞ்சமா (நவீன) பூதங்கள்
புதுக்கவிதை
நீர்
உலகில் மூன்றி லிரண்டுபங்கு - எந்த
பங்கிற்கு முடன்படா திதன் பாங்கு!
பாலைவிட பரபரப்பாய் விற்பனை யாகும்
பஞ்சமான பரம் பொருள்
அக்கினி
இதற் குண்டு தீவலை - அதனை யடக்கி
வைத்தால் தேவலை; பார்போற்றி வாழ்ந்தோரையும்,
பாதகரை, பச்சிளம் பாலகர்களையும்
சமமாய்ப் பாவிக்கும் பஞ்சமா பாதகன்
நிலம்
பயன்பாட்டால் கிடக்குது சீர்கெட்டு - அதனால்
மனித வாழ்வும் போகுது பாழ்பட்டு!
இயற்கையோடு கொஞ்சி வாழ்ந்த காலம்மாறி
செயற்கையிலே பின்னிப்பிணைந்து பஞ்சாய்ப் பறக்கிறோம்!
காற்று
தூசினால் மாசுபட்டு மரிவோர் ஆயிரமாயிரம்
அதன்வீச்சால் பரவும் நோய்கள் பல்லாயிரம்
காசுகொடுத்து சுவாசிக்குஞ் ஜீவன்கள் பலர்
தூய காற்றிற்கேங்கி பஞ்சமாய் தவிக்குது பார்!
ஆகாயம்
ஆகாயத்தில் விழுந்துவிட்ட தோட்டை; அதை
நாமடைக்கா விட்டாலே நடக்குஞ் சீர்கேடு
அதனால் மாறுது இயற்கையின் கோட்பாடு
பஞ்சமான பருவநிலை மாற்றமதன் வெளிப்பாடு!
அச்செடுக்க
கவிஞர் சுஜா (மு. துரைசாமி),
வேளாண் அலுவலர்
வேளாண் இயக்குநரகம்
புதுச்சேரி
|