ஏரிப் புனரமைப்புப் பாவரங்கம்

புதுக்கவிதை


நீர்

ஊர்காக்க வனம் வேண்டும்
தாகந் தீர்த்து உயிர்காக்கும்,
நீர்காக்க மனம் வேண்டும்!

நூறு சதவீத தண்ணீரு இப்புவியில்
மூணு சதவீத தண்ணீரே உன்நீரு!
நாளை நம்மக்கள் சிந்தாது விழிநீரு;
நம்முயிராய் நாம்காத்தல் இன்று மழைநீரு!

இனிவரு மழை பற்றிக் கவலை விட்டிடு;
இருப்பதை இழக்காமல் விழிப்புடன் செயல்படு!
நீருக்கு விலையிட்டு விற்றது போதும் - இனிவரும்
பேருக்குஞ் சிறிது விட்டுவைப் போமே!

அவ்வைக்கு அதியன் தந்தான் உயிர்க்கொடை -
நெல்லிக்கனி மூலம் ;
நாமுந் தருவோம் உயிர்க்கொடை நம் சந்ததிக்கே -
தாகந் தீர்க்கும் மழை மூலமே!




கவிஞர் சுந்தர முருகன்,
புதுச்சேரி