|
o::::o தமிழா இணையதளத்திற்குச் செல்ல கீழ்வரும் படத்தைச் சொடுக்கவும்
யூனிகோட் எனப்படும் ஒருங்குறி, திஸ்கி, பாமினி, தாம், தாப், முதலான எழுத்துரு வகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இணைய பக்கங்களை, கோப்புகளைத் தெளிவாகக் காண அந்தந்த வகை எழுத்துருக்களில் ஏதேனும் ஒன்று அவசியம் நமது கணினியில் பதிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வகை எழுத்துருக்களைப் பயன்படுத்தி இணைய பக்கங்களை, கோப்புகளை உருவாக்க, மேற்கூறிய எழுத்துரு வகையை பயன்படுத்தும் ஏதேனும் ஒரு தமிழ் விசைப் பலகை மென்பொருள் கட்டாயம் தேவை. தமிழா இணைய தளத்தினரும், முரசு தளப் பொறுப்பாளரும் தமிழுக்கு இன்றியமையாத வகையில் இரு வெவ்வேறு வகை தமிழ் விசைப்பலகை மென்பொருட்களை உருவாக்கி இலவயமாக தங்கள் தளங்களில் அளிக்கின்றனர். முரசு அஞ்சல் பல்வேறு வகை தமிழ் தட்டச்சு விசைப்பலகைகளைக் கொண்ட முரசு அஞ்சல் எனும் பொட்டலத்தை அளிக்கின்றனர். அதனை இந்த இழையிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: முரசு அஞ்சல். அதுபோலவே மேலே கொடுக்கப்பட்ட படத்தின் பின்புலத்திலிருக்கும் இழை வழியாக தமிழா இணையதளத்திற்கு சென்று அவர்கள் தரும் மூன்றுவகை தமிழ் விசைப்பலகை மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனினும் ஒரே ஒரு தளத்திலிருந்து அல்லாமல் இரண்டு அல்லது மூன்று கண்ணாடி இழைகளாக இலவய மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய உதவுவது தமிழின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்குமென்பதால், புதுச்சேரி மின்னிதழிலிருந்தே இந்த தமிழா தமிழ் விசைப்பலகை மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய ஏதுவாக வலையேற்றம் செய்யக் கேட்டபோதில், அன்புடன் அனுமதியளித்த திரு முகுந்தராஜ் அவர்கட்கு புதுச்சேரி மின்னிதழ் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. ஏகலப்பை மென்பொருளுக்கான காப்புரிமைக்கு உரியவர்கள்: ThamiZha.com For Support Email: e-uthavi@yahoogroups.com Web: http://www.thamizha.com/ இதில் பயனாகும் கீமேன் மென்பொருளுக்கான காப்புரிமைக்கு உரியவர்கள்: Keyman Technology Copyright (C) 2002 Tavultesoft. Tavultesoft PO Box 550 Sandy Bay TAS 7006 AUSTRALIA Fax: +61 3 9923 6047 Email: support@tavultesoft.com Web: http://www.tavultesoft.com/ இலவய எழுத்துருக்களுடன் கூடிய, யுனிகோட் எனப்படும் ஒருங்குறி, திஸ்கி அஞ்சல், பாமினி, தமிழ்நெட் விசைப்பலகை மென்பொருட்களைப் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட சுட்டிகளைச் சொடுக்கவும்
o::::o |