தாய்மையெனப்படுவது யாதெனில்
(நேரிசை வெண்பா)
உயிரதனைச் சேர்த்தே உதிரப்பா லூட்டித்
துயிலதுவும் தானின்றி என்றும் - பயில்கின்ற
தன்மக்கள் மேன்மைத் தவமியற்றுந் தாயவளின்
அன்பிற்கு முண்டோ எதிர்?
நன்னெறியை நாடுவைநீ நானிலத்தில்! என்னுயிரே
புன்னெறியை சாடுவைநீ பூமலரே! - கண்ணெதிரில்
அஞ்சுதலை முற்றும் அறுத்திடுவாய் என்னுந்தாய்
நெஞ்சுக்கும் உண்டோ நிகர்?
வீரத்தைத் தன்பாலாய் மென்தமிழின் தாலாட்டாய்
ஆர்க்கின்ற பாவியமாய் அன்புமனச் - சீர்மையென
சேய்தன் இதயத்தில் சேர்க்கின்ற தாய்மையின்
தூய்மைக்கோர் டில்லை தேர்!
அச்செடுக்க
கவிஞர் இராஜ. தியாகராஜன்
புதுசேரி
|