யூனிகோட் எழுத்துருக்களையும் உருகுறிமுறையையும் பயன்படுத்தும் வழிமுறைகள்

o::::o

          இந்த தளம் யுனிகோட் என்னும் பன்மொழி உருகுறிமுறையில் உருவாக்கப் பட்டது. இத்தளத்தின் விவரங்களைப் படிக்கத் தமிழ்ப் பன்மொழி யுனிகோட் எழுத்துருக்கள் தேவை. யூனிகோட் எழுத்துருக்களை இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். இனிவரும் ஆண்டுகளில் இணைய தளங்களில் பயன்படுத்தும் எழுத்துருக்கள் இந்த வகை பன்மொழி யூனிகோட் உருகுறிமுறையைப் பின்பற்றித்தானிருக்கும். இப்போதே பல நூறு தமிழ்த் தளங்கள் தங்கள் வலைப் பக்கங்களில் யுனிகோட் உருகுறிமுறையைத் தான் பயன்படுத்துகின்றன. தமிழில் யூனிகோட் உருகுறிமுறை எழுத்துருக்களை பயன்படுத்தும் பல தளங்களில், பின்வரும் தளங்கள், மிகச் சிறப்பு வாய்தவையாம்:-

  • http://www.maraththadi.com
  • http://www.thamizha.com
  • http://www.thisaigal.com
  • http://www.thinnai.com
  • http://www.ezilnila.com
  • http://buhari.googlepages.com/anbudan.html##unithamil

          யுனிகோட் எழுத்துருக்களையும் உருகுறிமுறையினை பயன்படுத்தி வலையேற்றப்பட்டப் பக்கங்களை படிக்கவும், பார்க்கவும் தேவையான வலையுலாவிகளும்(Web Browsers), இயக்க நியதி மென்பொருட்களும்(Operating Systems): -

இயக்க நியதி மென்பொருள்
(Operating System Supported)

வலையுலாவிகள்
(Web Browers Supported)

வகை
(version Number)

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்- 98 SE அல்லது அதற்கு மேலும்.

இணைய நாடோடி
மோஸில்லா
நெருப்பு நரி
ஒபரா
தமிழா

5.5 அல்லது மேல்
1.5 அல்லது மேல்
0.8 அல்லது மேல்
7.0 அல்லது மேல்
6.0 அல்லது மேல்

லினக்ஸ்-ஆறு (அ)
அதற்கு மேல்

மோஸில்லா
நெருப்புநரி

1.5 அல்லது மேல்
0.8 அல்லது மேல்

குறிப்பு: மைக்ரோஸாஃப்ட் சாளர (விண்டோஸ்) இயக்க நியதி மென்பொருட்களில் யூனிகோட் உருகுறிமுறையினை முன்னிறுத்திக் கொள்ளலாம்.

இண்டிக் மொழிகளுக்கான சேவையை மைக்ரோஸாஃப்ட் நிறுவனம், விண்டோஸ்-2000, விண்டோஸ்-XP, அதற்கு மேலானவைகளில் ஏற்கனவே நிறுவி இருக்கிறது. ஆனால், நாம்தான் முன்னிறுத்தம் செய்தல் வேண்டும். ஆனால் இயல்பாகவே இது முன்னிறுத்தம் செய்யப் படாததால், இந்த இணைப்பில் கூறியபடி இண்டிக் மொழிகளை முன்னிறுத்தம் செய்திடவேண்டும்.


அச்செடுக்க

o::::o