துளிப் பாக்கள்
துளிப்பா
கொண்டவனுக்குக் குறை;
வந்தவளுக்குக் கறை'
மலடிப் பட்டம்!
கற்புக்குக் களங்கம்;
எய்ட்சுக் கணவனின்;
குற்றச் சாட்டு!
அவள் வீட்டில்;
அன்றாடம் ஆழிப்பேரலை;
குடிகாரக் கணவன்!
பெண்கள் சமவுரிமை;
நம்மண்ணில் என்றுமே
சவக் குழியில்!
நாங்கள் ஒய்வெடுக்கும்
ஒரே இடமட்டும்
கருவறை தானோ!
நாங்கள் எண்ணிப்;
பார்க்கவே முடியாது;
இரண்டு மூன்று!
பாவலர் திருமதி சூரிய விசயகுமாரி
புதுச்சேரி
|