|
பாரதியே வாழ்க
பல்லுயிரும் பல்லுருவும் தாழ்வு நீக்கி
..........பாரிலுள்ளோர் அனைவருமோர் குலமே ஆகி
பாரதத்தில் தன்கவிதைப் புலமை யாலே
..........பகுத்தறிவை ஊட்டியயெம் பாரதியே வாழ்க!
விண்ணுடனே நம்மண்ணை ஆழ்கடலை ஆய்ந்தறிந்து காணும்
..........விஞ்ஞான நுண்ணறிவு வளர்ச்சிகண்டு பாடினான் நற்பாட்டே!
சுதந்திரமாய் இந்தியத்தாய் விடுதலைக்குச் சுவைப்பாட்டை தந்தான்!
..........மதம்சாதி அழிவதற்கு பாட்டிசைத்த பாரதியே வாழ்க!
அச்செடுக்க
பாவலர் ப. சுந்தரவிநாயகம்
புதுச்சேரி
|